Powered By Blogger

Sunday, May 3, 2020

கலங்காதே..,இதை செய்..!!

கலங்காதே..,இதை செய்..!!
# ஊக்கமதுகைவிடேல்

உழவு தொழில் புரிய - நிலத்தை
சமன் செய்து
உரமிட்டு
பருவம் பார்த்து
பயிரிட்டு
பலன் பெறுவான் விவசாயி

அதுபோல,

உன் நிலமெனும் மனதை
சமன் செய்து
உரமிட்டு
அறிவொளி பெருக்கி
காலம் கருதி
கலங்காது காத்திரு
வெற்றி நிச்சயம்..!!

Friday, December 6, 2019

என் அவள்

எல்லாக் கவிகளும்

சிந்தனை உலகில்

கற்பனை ஓவியம்

தீட்டுவதுண்டு..!!

ஆனால்,

நிஜத்தில்

எல்லா ஓவியங்களும்

கை சேர்ந்ததா என்பது தான்

கேள்வியே..!!

இங்கு ஓவியம் (என்-அவள்)

                                       @vinowrites

                                          
                           

Saturday, January 19, 2019

மனதின் தேடல்...

                                                   
                                                        மனதின் தேடல் - 1

தேடல் 

மனித வாழ்வில் தேடல்கள் என்பது 
வேறென்ன..? வாழ்வே தேடல்தான். அத்தேடல்கள் அனைத்தும் பல பரிமாணங்களில் அவர் அவர் வாழ்க்கைக்கு ஏற்றாற்போலவும், சூழலுக்கு ஏற்றாற்போலவும் அதன் அளவு சற்று சிறியதாகவோ அல்லது பெரிய தேடலாகவோ இருக்குமே தவிர, தேடல் தேடல்தானே அது இல்லாத வாழ்க்கை ஏது. அதைப்போலத்தான் என் வாழ்க்கைத் தேடலும்...பல தேடல்கள் நிறைந்ததாகவே இருந்தது, இருக்கிறது. அதில் அறிவுத்தேடல், பொருட்தேடல், அன்புத்தேடல், இன்பத்தேடல், பாசத்தேடல், கல்வித்தேடல், தனிமையின்  புரியாத தேடல்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் என் காதல் தேடலும் பயணப்படத்தான் செய்தது. அதன் தேடலை என்னும் போதெல்லாம் எவருக்கும் இன்பம் அதிகரிக்கத்தான் செய்யும். அது போலத்தான் என் காதல் தேடலும் தொடர்ந்தது. என் அன்பிற்குரிய பாரதிக்கு கண்ணம்மாவைப் போல, எனக்கு இவள் கண்மணி.
காதல்

அவளைப் பற்றி சொல்லத் தொடங்கியதுமே என் இதயத் துடிப்புகள் அதிகரிக்கத்தான் செய்கிறது.  இதுதான் காதல் துடிப்போ என்று எண்ணி பலமுறை சிரித்ததும் உண்டு, புரியாமல் குழம்பித் தவித்ததும் உண்டு. சரி சரி கதைக்கு வருவோம், நான் முதல் முதலில் அவளைப் பார்த்த தருணமே இனம் புரியாத ஓர் பேருணர்வு என்னுள்  ஒட்டிக்கொண்டது என்றும் பிரிக்க முடியாத பசைப்போல. அதை விவரிக்க முடியாது, நீங்கள் அதை அனுபவித்தால் கண்டிப்பாக உணர முடியும். அப்போது எனக்குத் தோன்றியது இவள்தான் என் வாழ்க்கைத் துணை என்று. ஆனால் ஒருவன் ஒரு முடிவு எடுப்பதற்கு பல குழப்பங்கள் நிகழும்தானே, அதுபோலத்தான் எனக்கும் பல குழப்பங்கள். ஏன் என்றால் அவள் என்னைவிட சற்று சிறியவள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் மிகச்சிறியவள் என்றே சொல்லலாம். என்ன குழப்பமாக உள்ளதா எனக்கும் அப்படித்தான் உள்ளது என்ன செய்ய என் எண்ண அலைகளுக்கு எப்படிப் புரியும், அவளை காந்தம்போல கவர்ந்து பிரியாமல் ஒட்டிக்கொண்டது. நான் என்ன செய்வது? என்னால் முடிந்தது நான்கு வரிக் கவிதைதான் எழுத முடிந்ததே தவிர வேறென்ன.

அவள் சிறியவள் அதனால்...





மனதின் தேடல் தொடரும்...








Friday, January 4, 2019

என் முதல் ஆங்கிலக் காதல் கவிதை..!!

கிறுக்கல்கள்...
என் முதல் ஆங்கில காதல் கவிதை என்று சொல்லலாம்.

என் முதல் ஆங்கிலக் காதல் கவிதை..!!
ஒருவனுக்கு 
காதல் துளிர்விடும் போது 
அவன் கிறுக்கன் ஆவது போல 
அவனது எழுத்துக் கிறுக்கல்களும் 
கிறுக்குத்தனம் ஆகின்றது..!!
காதல் கிறுக்குத்தனம்.
நான் 
எழுதிய மறுகணம் 
கிறுக்கன் போல 
சிரிக்கத்தான் செத்தேன்.
ஏன் என்றால்,
நான் எழுதியது 
கவிதை என்று 
என் எண்ணக் காதலி நம்பியதால்..!!


                                             

Saturday, December 15, 2018

"இறைவன்=எண்ணங்கள்"

"வே.சு" வின் கிறுக்கல்கள்...

                     "இறைவன்=எண்ணங்கள்"



ஒரு மனிதப் பிறப்பில் அவனது வேண்டுதலெல்லாம், "நல்லவழி காட்டு சாமி" எனும் மந்திரக் குமுறல்கள் நிறைந்தே உள்ளது.அவனின் எண்ணங்களின் நம்பிக்கையின் அளவுகோல் எவ்வண்ணமோ அதைப்பொறுத்தே அவனது தேடல்கள் அனைத்தும் பூர்த்தி அடைகிறது.

ஒருவனது வாழ்வில் நல்ல வழியோ, நல்வினைகளோ, இன்பமோ, துன்பமோ
பிறக்க வேண்டும் எனில், நினைத்த உடன் ஏதும் கிடைத்திடாது அவனது எண்ணத்தின் சக்தியை பொறுத்ததே தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்த சக்தி மிக்க எண்ணங்களே  இறைவனே தவிர வேறொன்றும் இல்லை. 

ஒருவேளை ஒருவன் நினைத்த உடன் அனைத்தும் நடந்து விட்டால் 
அவன் ஒருவன் மறந்தே போவான் "இறைவன்".  



Monday, December 3, 2018

ஒற்றைப் பூக்கள்...

 வே.சு வின்  கிறுக்கல்கள்...
                                                                ஒற்றைப்பூக்கள்....

அனைத்து மனிதனும் ஒற்றைப் பூக்களைப்  போலவே,
ஒருவன் வாழ்வில்சென்றடையும் இடத்தின் தேடலெல்லாம்
கேள்விக்குறிகள் தான்...அந்த தேடலின் முடிவு ஒருவனுக்கு கங்கையை போன்று களங்கமில்லாதப்  புனிதமான இன்பத்தையும்,அதே மற்றொருவனுக்கு கற்கள் போற்றிய போர்வையும் விடையாகக் கிடைக்கிறது. இந்த விடையின் அழகு அவர்கள் என்னிய எண்ணச்செறிவுகளின் வலிமையை பொறுத்ததே...நீயும் எடையிட்டுப் பார் உன் எண்ணம் எவ் வகை என்று...."பூக்களை பதப்படுத்தும் பதப்பெட்டிகள் இங்கு ஏராளம்". அது 
போல உன் எண்ணங்களை பதப்படுத்தி கங்கையை அடைந்துவிடு....